இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாபிரிக்கா !

இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாபிரிக்கா !

2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (03) நடைபெற்ற நான்காவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பவர் பிளேயில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது.

தொடர்ந்த போட்டியில் கேசவ் மஹராஜ் மற்றும் அன்ட்ரிச் நோர்கியே ஆகியோரின் பந்துவீச்சுக்கு தடுமாறிய இலங்கை வீரர்கள் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

அத்துடன் இது இலங்கை அணி T20 போட்டிகளில் பெற்ற அதிகுறைந்த ஓட்டங்களாகவும் இது பதிவாகியுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்கள் எடுத்ததோடு, ஏனைய வீரர்களில் மெதிவ்ஸ் 2 சிக்ஸர்கள் பெற்று 16 ஓட்டங்கள் பெற்றார்.

தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் அன்ட்ரிச் நோர்கியே 07 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, ககிஸோ றபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 78 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கைப் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நுவான் துஷார மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக என்ட்ரிச் நோர்கியே தெரிவாகினார்.

இப்போட்டியோடு T20 உலகக் கிண்ணத் தொடரினை தோல்வியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை அணியானது தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (08) பங்களாதேஷினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )