சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )