காலாவதியான 15 ஆயிரம் தொன் அரிசி மீட்பு

காலாவதியான 15 ஆயிரம் தொன் அரிசி மீட்பு

சுமார் 15 ஆயிரம் தொன், காலாவதியான அரிசி மூட்டைகள், வர்த்தக நிலையத்திற்கு இறக்கப்பட்டு கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மாவனெல்ல நகரில், வர்த்தக நிலையமொன்றில், நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மூட்டைகளில், காலவதியாகும்  திகதியாக 2023 நவம்பர் மாதம்  பொறிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அரிசி மூடைகள் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்கு முன்பாக லொறியில் இருந்து இறக்கப்பட்டு வர்த்தக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனையடுத்து அந்த வர்த்தக நிலையத்தின் வர்த்தகர் கைது செய்யப்பட்டார். அவரை, கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளுடன் மாவனெல்ல நீதவான் முன்னிலையில் எதிர்வரும்  5 ஆம் திகதி ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )