
ஜனவரி மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆகும்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 674 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 315 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 303 டெங்கு நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 278 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 201 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
16 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமிக்க வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
TAGS Sri lanka