
பிரதமருக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசில் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா நேற்று முன்தினம் (03) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு ருவாண்டா எதிர்பார்ப்பதாக உயர் ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை விரிவுபடுத்த இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

TAGS Harini AmarasuriyaHigh Commission of Sri Lanka in the Republic of Rwandaprime ministerSri lanka