
EPF தொடர்பான விசேட அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் (AH பதிவு செய்யும்) புதிய நடைமுறையானது தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காக, 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஒரு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஒரு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.