4 நாட்களில் 516 டெங்கு நோயாளர்கள் பதிவு

 4 நாட்களில் 516 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பெப்ரவரி மாதம் ஆரம்பித்து 4 நாட்களில் 516 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 2,439 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.

மேலும், வடமாகாணத்தில் 259 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 520 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 444 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )