2025க்கு தள்ளிப் போகும் புஷ்பா – 2

2025க்கு தள்ளிப் போகும் புஷ்பா – 2

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

 புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் திகதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – 2’ திரைப்படம் வரும் டிசெம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2025 ஏப்ரலுக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில காட்சிகள் ரிஷூட் மற்றும் இறுதிகட்ட பணிகள் காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )