சுவையான தேங்காய் பிஸ்கட்

சுவையான தேங்காய் பிஸ்கட்

பிஸ்கட் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? மாலை வேளையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.

அந்த வகையில் தேங்காய் பிஸ்கட் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • மைதா மா – 100 கிராம்
  • தேங்காய் துருவல் (வறுத்தது) – 25 கிராம்
  • சீனி – 40 கிராம்
  • பட்டர் – 80 கிராம்
  • வெனிலா சுகர் பவுடர் – அரை தேக்கரண்டி
  • பாதாம் பருப்பு தூள் – 15 கிராம்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பட்டரை உருக்கி, அதில் தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

அதனுடன் மைதா மா, சீனி, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

இந்தக் கலவையை சப்பாத்தி மா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் பொலித்தீன் பையில் போட்டு அரை மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

அரை மணித்தியாலத்துக்குப் பின்னர் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்து விரும்பிய அச்சுக்கள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய தட்டில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

தொடர்ந்து 180 டிகிரியில் சூடாக்கப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரையில் வேக வைத்து எடுக்கவும்.

அருமையான தேங்காய் பிஸ்கட் ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )