நெல் விலை போதுமானதாக இல்லை – விவசாயிகள் கவலை

நெல் விலை போதுமானதாக இல்லை – விவசாயிகள் கவலை

நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சிவப்பு நெல் 120 ரூபாவாகவும், சம்பா நெல் 125 ரூபாவாகவும், கீரி சம்பா நெல் 132 ரூபாவாகவும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நெல்லினை 8,000 ரூபாவுக்கு தனியார் கொள்வனவு செய்கின்றனர். 

விவசாயிகளாகிய எமக்கு இம்முறை பாரிய மழை, வெள்ளம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக அழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 10,000 ரூபாவுக்கு கூட நெல்லை விற்பனை செய்தாலும் எமது நட்டத்தினை ஈடு செய்ய முடியாத நிலையில் விவசாயிகளாகிய நாங்கள் உள்ளோம் என கவலை தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )