
கைவிலங்குடன் நாடுக்கடத்தபட்ட இந்தியர்கள் – எஸ். ஜெய்சங்கர் விளக்கம்!
இந்தியர்கள் நாடு கடத்தப்படும் போது தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் குடியேறிய 104 இந்தியர்கள் நேற்று அமெரிக்க இராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் விமானத்தில் பயணித்த போது கைவிலங்கு போடப்பட்டதாகத் தெரிவித்து விமர்சனங்கள் எழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், நாடுகடத்தப்படும் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கா அரசாங்கம் தன்னிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
TAGS Sri lanka