
பாலியல் வன்முறையின் பின்னர் 100 பெண்கள் உயிருடன் எரிப்பு!
கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் எனஅதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்துக்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100இற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர்.
கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்ற வேளை பெண் கைதிகளை
தாக்கினர் என ஐ. நா. அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பிச்சென்றனர்.
அவர்கள் பெண் கைதிகளின் பகுதிக்கு தீ மூட்டினர் என கோமாவில்
உள்ள ஐ.நா. அமைதிப் படையின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News