
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆம் நாள் ஆட்டம் இன்று!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 90 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் போட்டியில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 74 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஏனையவர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் , இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது