
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று!
இலங்கை – அவுஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கான ஆடுகளம் வறண்ட ஆடுகளமாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய அணி தரப்பு தெரிவித்துள்ளது.
ஆடுகளம் முதல் இரண்டு நாட்களில், துடுப்பாட்டத்துக்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரும், அலன் போர்டர் பதக்கம் வென்றவருமான டிராவிஸ் ஹெட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியை படுதோல்வியடைய செய்தது.
முதல்போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு இலங்கை அணி
பதிலடி கொடுக்குமா? இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்