
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே வனசிங்க அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று (06) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் வழங்கி ஒத்துழைப்பினையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.



CATEGORIES Sri Lanka