
உத்தியோகபூர்வமானதற்கு அப்பால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை நிச்சயமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்
அரச உத்தியோகபூர்வ பொறிமுறையின் மற்றும் தனியார் துறையின் நிறுவன வரையறைகளுக்கு அப்பால் காணப்படும் கூட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் ஊடாக அனுபவங்களைப் பெற்று நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நிதி அமைச்சு, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மிலேனியம் எய்ட், டயலொக் ஆசியாடா போன்ற தனியார் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை அப்பியாசக் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான பொறிமுறைக்குத் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு 6000/- ரூபாய் வீதம் வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.
நேற்று (06) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.