
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஆளுநர் செயலகத்தில் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் கல்விச் சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பை கடந்த காலங்களில் பெற்றிருந்தன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகாரிகளால் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பிலும், எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு சீர் செய்யலாம் என்றும் நிர்வாகத்தினரால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களங்களின் கலந்துரையாடல் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்வதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.