
ஜனாதிபதி இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகவுள்ளார்.
இந்த விஜயத்தில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, டுபாயில் நடைபெறவுள்ள உலக அரசாங்களுக்கு இடையிலான உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தகவல் தொழினுட்பம், இயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் ஒத்துழைப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
விசேடமாக வலுசக்தி மற்றும் எரிவாயு கொள்முதல், மின்சாரம் மற்றும் வலுசக்தி திட்டங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.