
நுரைச்சோலை மின் நிலையம் 4 நாட்களில் இயல்பு நிலைக்கு
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.