இஸ்ரேல் சென்ற இலங்கையர்குழுவை நாடு கடத்த தீர்மானம்!

இஸ்ரேல் சென்ற இலங்கையர்குழுவை நாடு கடத்த தீர்மானம்!

இஸ்ரேலுக்கு தொழிலுக்காகச் சென்று தொழில் ஒப்பந்தத்தை மீறிய 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறைக்காக தொழில் விஸாவில் இஸ்ரேலுக்கு வந்த இவர்கள், பணியிடங்களை விட்டு தப்பிச்சென்று பேக்கரிகளில் பணிபுரியும் போது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து அவதானித்து வரும் நாடு எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பணியாளர்கள் இஸ்ரேலில் பணிக்கு வந்த பின்னர் அவர்களது விஸாவகையை வேறு விசா வகைக்கு மாற்றுவதற்கான சட்டச் சூழல் இல்லை என இஸ்ரேல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, தாதியர் பணிக்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்த இலங்கைப் பெண் ஒருவரும் சேவை நிபந்தனைகளை மீறிய தன் காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )