
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதுடைய மதலேநிவச, பதியதலாவ வீதி, ஹபரேவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து 25 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் ,3600 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்ற பட்டதாகவும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஹியங்கனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka