
கின்னஸ் சாதனை படைத்த எருமை
தாய்லாந்தில் 3 வயதில் 6 அடி, 8 அங்குலம் உயரம் கொண்ட நீர் எருமை, உலகிலேயே மிகவும் உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.
நஹோன் ராட்சசிமா என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் இந்த நீர் யானையை வளர்ந்து வருகிறது. வழக்கமாக 3 வயதில் ஒரு நீர் எருமையின் உயரத்தை வட 20 அங்குலம் உயரமகா இந்த எருமை உள்ளது.
கொரில்லா குரங்கு படத்தின் ஈர்ப்பு காரணமாக எருமைக்கு உரிமையாளர் கிங் காங் எனப் பெயரிட்டுள்ளார்.
இயற்கையில் ராட்சத விலங்குகள் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும். ஆனால். இந்த எருமை மிகவும் சாதுவாக, வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பண்ணையில் வேலை பார்க்கும் செர்பாட் வுட்டி கிங் காங் குறித்து கூறுகையில் “கிங் காங் பிறக்கும்போது மற்ற கன்றுகளை விட மிகவும் உயரமாக இருந்ததை உணர்ந்தோம். இதனால் இதன் உயரம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது முன்னதாக தெரிந்தது. தற்போது அதற்கு 3 வயதுதான் ஆகிறர்து. இளம் வயதாக இருந்தாலும், மிகப்பெரிய ராட்சத எருமையாக திகழ்கிறது” என்றார்.