
கடலில் கரையொதுங்கிய பாரிய கொள்கலன் மீட்பு!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் இன்று (12) கரையொதுங்கிய நிலையில் போயா என அழைக்கப்படும் பாரிய கொள்கலனொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய கொள்கலன் ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரைசோர்த்த பின்னர் பொலிஸார் குறித்த கொள்கலனை மீட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இவ்வாறான கொள்கலன்கள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka