
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் அமைச்சுசார் ஆலோசனை குழு கூடுவதற்கு முன்னர் பெற்று தரவும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று மாலை குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளது. இதனை அச்சிடுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால், அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடுவதற்கு முன்னமே உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு யோசனை முன்வைக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில், அமைச்சு சார் ஆலோசனைக் குழுவுக்குச் செல்வதற்கு முன்னர் எம்.பி.க்களால் இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
TAGS Ministerial Consultative CommitteeOpposition Leadersajith premadasaSJBSri lankaஅமைச்சுசார் ஆலோசனை குழுஉள்ளூராட்சி மன்ற தேர்தல்