
தமிழரசு கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஆரம்பம்
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது.
களுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்றுவருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது உயிரிழந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.