எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெற்றோல் விலை 6 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 371 ரூபாவாகும்.
இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை மாற்றமின்றி 311 ரூபாவாகும்.
வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை மாற்றமின்றி 283 ரூபாவாகும்.
மேலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை மாற்றமின்றி
183 ரூபாவாகும்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ள விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன.