
வேனும் பேருந்தும் மோதி விபத்து ; 12 பேர் காயம்
கந்தகெட்டிய – போபிட்டிய வீதியின் வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை தனியார் பேருந்து ஒன்று ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தகெட்டிய மற்றும் வெவெதென்னவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறுகிய வீதியின் வளைவுப் பகுதியில் இரண்டு வாகனங்களும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கந்தகெட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka