
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலை சுட்டெண் உயர்வு
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர் தன்மையில் நிறைவடைந்தன.
இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 219.36 புள்ளிகளாக அதிகரித்து 17,156 புள்ளிகளாகப் பதிவானது.
அத்துடன், எஸ் அன்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 71.19 புள்ளிகளால் அதிகரித்து 5106.40 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றைய தினம் 5.4 பில்லியன் ரூபாவாக பதிவானது.