புதுமண தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வசதி

புதுமண தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வசதி

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று செயலாளர் தெரிவித்தார்.

அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )