
🛑 Breaking News : நாளை மின்வெட்டு இல்லை
நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் வெட்டைத் தொடர்ந்தும் அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து நாளை மின்வெட்டை அமுல்படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
இதேவேளை இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 03 மின்மாற்றிகள் செயலிழந்ததால், மின்சார தேவையை நிர்வகிக்கும் பொருட்டு, இலங்கை மின்சார சபை நேற்றும் இன்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை தடை செய்ய முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 Breaking News :