
யுனைட்டெட்டை வென்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேம்ஸ் மடிஸன் பெற்றார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 44 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்றன.
CATEGORIES Sports News