இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka