சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் தூக்கிட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசெம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சித்ராவின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகாரளித்ததோடு சித்ராவின் கணவரான ஹேம்நாத் மீது குற்றம் சாட்டினர்.

அதனால் நசரத்பேட்டை பொலிஸார், ஹேம்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த ஹேம்நாத், ஜாமீனில் வெளியில் வந்தார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் சட்ட போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பொலிஸாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்யஉள்ளதாக தகவல்கள் வெளியாகின.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )