
பெண் வைத்தியரை தகாத வார்த்தகளால் பேசி அச்சுறுத்தியதன் காரணமாக ஸ்தம்பிதமடைந்த வைத்தியசாலை நடவடிக்கைகள்
பெண் வைத்தியரை தகாத வார்த்தகளால் பேசி அச்சுறுத்தியதன் காரணமாக ஸ்தம்பிதமடைந்த வைத்தியசாலை நடவடிக்கைகள்
கம்பளை உடகம வைத்தியசாலையில் பெண் வைத்தியர்கள் இருவர் இன்று பணியிடை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
நேற்றிரவு , குளவிகொட்டுக்கு இலக்காகி அழைத்துவரப்பட்டவரின் உறவினர்கள் , இந்த வைத்தியர்கள் இருவரையும் தகாத வார்த்தகளால் பேசி அச்சறுத்தியுள்ளனர்
இதன் காரணமாக குறித்த வைத்தியர்கள் இருவரும் இன்று பணியிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தனர்
வைத்தியசாலையின் அறிவிப்பு பலகையில் இந்த விடயம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு ஒன்றும் ஒட்ட பட்டதாகவும் , மாவட்ட சுகாதார அதிகாரிக்கும் சுகாதார தொழிற்சங்கத்திற்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிக்க பட்டதாகவும் வைத்தியர்களின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
கம்பளை அட்டபகே உடகமவின் ஹுனுகொட்டுகம பகுதியைச் சேர்ந்த ஒருவர்,
நேற்றிரவு குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டபோது, அந்த சமயத்தில் வைத்தியசாலைக்கு பொறுப்பாகவிருந்த வைத்திய அதிகாரி உதாரி பெனரகம, வேறொருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது
பாதிக்கப்பட்டவருடன் வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், அவருக்கு சிகிச்சையளிக்க தாமதமாகியதாக தெரிவித்து , மருத்துவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
குளவி கொட்டுக்கு இலக்கான நோயாளிக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்த பின்பும் , பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் நோயாளியை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்த்தியுள்ளதாகவும்
பின்னர் பாதிக்கப்பட்டவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் வைத்தியர் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வைத்தியரை அச்சறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில்
சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக ஹேமகுமார தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சுமுகநிலையை ஏற்படுத்த அந்தப் பகுதியின் மகா சங்கத்தினரும் இணைந்துள்ளனர்
புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை , சில நாட்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் பெண் ஒருவர் குலைவிக்கொட்டுக்கு இலக்கானபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த குளவிகள் மருத்துவமனையின் மருத்துவர், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளைத் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது .யின் மருத்துவர், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளைத் தாக்கியமாய் குறிப்பிடத்தக்கது .