புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள்

புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் அதிகரித்த வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான ஆதவு நடவடிக்கையாக தாங்கிக்கொள்ளக்கூடிய விலையில் அத்தியவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வசதியளிக்கின்றது.

த்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளடங்கிய உலர் உணவுப்பொதியொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ரூபா. 1,000 மில்லியன் நிதி ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )