எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ”உரிய முறையில் வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தற்போது வழங்கப்படக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளோம். இந்த நிலையில் புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )