மார்ச் 21ம் திகதிக்கு பிறகு வேட்புமனுக்களை கோரவும்

மார்ச் 21ம் திகதிக்கு பிறகு வேட்புமனுக்களை கோரவும்

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இன்று (18) தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். 

இந்த வரவு செலவுத் திட்ட செயல்பாட்டில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல கட்சிகள் உள்ளன.

எனவே குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது கடமைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.

மார்ச் 21 ஆம் திகதிக்குப் பிறகு இந்தத் தேர்தல் திட்டத்தை நோக்கி நகர்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளோம்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி நடைபெறும். அது முடிந்தவுடன், தேர்தல் செயல்முறையைத் தொடங்குமாறு கோரினோம். இந்தக் கோரிக்கையுடனேயே தேர்தல் ஆணைக்குழுவுக்கு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்று திருத்தங்கள் இன்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் 2025 ஜனவரி 9 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. 

அதற்கமைய இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 1 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரும். 

இந்தப் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களை அழைப்பதற்கான திகதியை அறிவிக்க வேண்டும், மேலும் அந்த திகதி தொடர்புடைய சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், தேர்தலுக்கான திகதி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )