அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கும் என நாம் நம்புகிறோம். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். எனினும் அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர், ”நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நிதி குற்ற விசாரணை பிரிவினால் எமக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்குவதாக நாம் நம்புகிறோம்.

எனவே நீதித்துறையின் சுயாதீன தன்மையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். வழக்கு விசாரணைகளின்போது எமது நேர்மைத் தன்மையை நாம் நீதிமன்றத்தில் நிரூப்பிப்போம்.

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை. எமக்கு என்று ஒரு கொள்கை உள்ளது.எமது பிணைப்பு மக்களுடனேயே உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )