
கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை
நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவயின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை என்று வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொடையைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி முன்வந்த போதிலும், அவரது குடும்பப்பெயரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சடலம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கனேமுல்ல சஞ்சீவவின் மனைவி இருந்தும் அவர் சடலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் முன்வரவில்லை என்றும் சடலம் தற்போது பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka