ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்

ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்

உக்ரேன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேவேளை, தங்கள் கருத்துக்களை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

மேலும், நேட்டோ அமைப்பு இல்லாமல் தங்களுக்கென்று தனியே படையை ஐரோப்பிய யூனியன் உருவாக்க வேண்டுமென்றும் ஜெலன்ஸ்கி கூறினார். ஆனால், உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார்.

இந்த சூழலில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்கா-ரஷ்யா இடையே சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் உக்ரேனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், போர் தொடங்க உக்ரேன் தான் காரணம் என்றும், உக்ரேன் ஜனாதிபதி முன்பே இந்த போரை நிறுத்தி இருக்க வேண்டும் என்றும் கடுமையாக சாடினார்.

இந்நிலையில் உக்ரேன் தலைநகர் கீவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “போருக்கு உக்ரைன்தான் காரணம் என்று டிரம்ப் தவறாக கூறுகிறார். இ்ந்த விவகாரத்தில் அவர் ரஷியாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)