
6 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து வீதி சோதனையில் ஈடுபட்டனர்.
உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், வாகனமும் அதனை செலுத்திய சாரதி உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 400 கிலோவிற்கு அதிக நிறையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized