
பொது மயானம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
கம்பஹா, மஹேன பகுதியில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத தொகையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அதன்படி, T56 துப்பாக்கி ஒன்றும் மெகசின் ஒன்றும் இயங்கக்கூடிய 23 இரவைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று (26) காலை மினுவங்கொடை பத்தடுவன சந்தியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற அதிகாரிகளுக்கு, கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
TAGS Sri lanka