
எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்
2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமன கடிதம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது .