நெய் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா ?
நெய்யின் மணத்துக்கும் சுவைக்கும் அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவுகளில் சேர்க்கப்படும் சிறிதளவு நெய்யினால் அந்த உணவுக்கே புதிய சுவை கிடைக்கிறது என்றால் அதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது.
நெய்யில் விட்டமின் ஏ, ஈ,கே போன்றவை காணப்படுகின்றன. இது உங்கள் சருமம், முடி மற்றும் செரிமானத்துக்கு மிகவும் ஊட்டமளிக்கும்.
வயிற்றிலிருக்கும் ஆரோக்கியமான பக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சக்தி நெய்யிற்கு உண்டு.
மேலும் நெய்யில் நிறைந்துள்ள பியூட்ரிக் அமிலம் உங்கள் உடலில் ஏற்படும் நோயை எதிர்த்து போராடும். அத்துடன் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்புகள் அதிகமாக இருப்பதோடு புற்றுநோயையும் எதிர்த்து போராடும்.
நெய்யில் இருக்கும் சத்துக்கள் உங்கள் சருமத்துக்கு ஊட்டமளித்து நீரேற்றமாக வைத்திருக்க உதவும். அத்துடன் சருமத்தை இறுக்கமாக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது.
அத்துடன் முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, உள்ளே இருந்து முடியை வலுவாக்குகிறது.