எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம்
எதிர்வரும் 26ஆம் திகதி (புதன்கிழமை) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரிக்கைகளை உறுதியளித்தபடி வழங்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இன்று (18) முதல் பல்கலைக்கழகத்திற்கு சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் சத்தியாக்கிரக போராட்டம் கொழும்புக்கு கொண்டுவரப்படும்” என தெரிவித்துள்ளார்