2024 யூரோ கிண்ண கால்பந்து தொடர் : ஸ்பெயின் அணிக்கு கோல் அடித்த இத்தாலி வீரர்.. வெற்றி யாருக்கு ?
2024 யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான குரூப் பி பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதின.
இத்தாலி அணியின் வீரர் ரிக்கார்டியோ காலாஃபியோரி 55 ஆவது நிமிடத்தில் தங்கள் அணியின் கோல் போஸ்டிலேயே கோல் அடித்தார்.
இதனால் அவர் அடித்த கோல் ஸ்பெயின் அணிக்கு சாதகமாக அமைத்தது.
இந்த கோலினால் ஸ்பெயின் அணி 1 – 0 என முன்னிலை பெற்றது.
யூரோ கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இத்தாலி வீரர் ஒருவர் தனது அணிக்கு எதிராக கோல் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்த போட்டியில் இரு அணிகளினாலும் கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது.
ஆட்ட நேரம் முடிந்தும் ஆறு நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
குறித்த மேலதிக நேரத்திலும் இரண்டு அணிகளிலும் கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது.
இத்தாலி அணி வீரர்கள் பலமுறை கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபடும் ஸ்பெயின் வீரர்களின் தற்காப்பு அபாரமாக இருந்ததால் அவர்களால் கோல் போஸ்ட்டை நெருங்க முடியவில்லை.
இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் 2020 எலிமினேஷன் போட்டியில் இத்தாலி அணியால் தோல்வி அடைந்து வெளியேறிய ஸ்பெயின், அதற்கு பழி தீர்த்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.