இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி

தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து பயணிகள் புதிய ரயில் ஒன்று புறப்பட்டது. வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.

அதேசமயம் 1,500 டன் தாமிர பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரயிலும் அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. புறநகர் பகுதியான சான் பெர்னார்டோ அருகே சென்றபோது அந்த இரு ரயில்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் நேருக்குநேர் மோதியதில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி சரக்கு ரயிலின் மீது ஏறியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 சீனர்கள் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மற்றொருபுறம் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )