வாகன விபத்தில் சிக்கிய திஸ்ஸ அத்தநாயக்க வைத்தியசாலையில் அனுமதி !

வாகன விபத்தில் சிக்கிய திஸ்ஸ அத்தநாயக்க வைத்தியசாலையில் அனுமதி !

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் , ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் நேற்றைய தினம் இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் குறித்த மூவரும் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )