பகலில் அதிகமாக தூக்கம் வருதா ?

பகலில் அதிகமாக தூக்கம் வருதா ?

பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

அதிக தூக்கம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது என்றால், இது சில பாதிப்புகளையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹைப்பர்சோம்னியா என்பது அதிக பகல்நேர தூக்கத்திற்கான பாதிப்பாகும்.

பொதுவாக சிலருக்கு இரவில் நன்றாக தூங்கினாலும் பகலில் தூக்கம் வரலாம். இதன் விளைவுகள் அன்றாட வாழ்க்கையில் மோசமாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருக்க கூடும்.

இதை சரியான முறையில் கையாள சில வழிகள் உள்ளது.

பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை தவிர்ப்பதற்கான முதல் வழி, ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் தூங்குவதற்கு செல்லுங்கள். இது உங்கள் உடலை தூக்க முறைக்கு ஏற்ப மாற்ற உதவும்.

மேலும், உங்கள் படுக்கையறை நன்கு காற்றோட்டமாகவும், குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வசதிக்கேற்ற மெத்தை, தலையணைகள் மற்றும் போர்வைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

காஃபின் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இதை உட்கொள்வது மூளைக்கும் உடலுக்கும் இடையில் பயணிக்கும் செய்திகளை விரைவுப்படுத்தும். இது ஒரு நபர் அதிக விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், ஆற்றலுடனும் இருக்கும்படி உணர வைக்கிறது.

 எனவே காபி, கோலா, டீ, சாக்லேட் போன்றவற்றை தவிர்ப்பதால் பகல் நேர தூக்கத்தை தவிர்க்கலாம். மேலும், தூக்க மாத்திரைகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றுடன் புகையிலை மற்றும் பிற நிகோடின் சார்ந்த பொருட்களிலிருந்தும் விலகி இருங்கள்.

உங்கள் உடல்நிலையைப் பற்றி உங்கள் நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். ஹைப்பர் சோம்னியாவைக் கையாளும் ஒருவருக்கு, இரவு நேர ஷிஃப்ட் வேலை செய்வது தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது அவர்களின் நிலையான தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே, பகல் நேரங்களை கொண்ட வேலைக்கு சென்று உங்கள் தூக்க நேரத்தை சீர்படுத்துங்கள்.

மது பெரும்பாலும் உங்களை தூங்க வைக்க உதவும் ஒரு பானமாக கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், இதற்கு மாறாக மது என்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்களை இரவு நேரத்தில் விழித்திருக்கச் செய்யும், மற்றும் அடிக்கடி மோசமான கனவுகளையும் ஏற்படுத்தும். மேலும் இது உங்களின் உடல் நலத்தையும் பாதிக்க செய்யும். ஹைப்பர் சோம்னியாவில் இருந்து விடுபட மதுவை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் ஹைப்பர்சோம்னியா அல்லது பிற தொடர்புடைய மருத்துவ நிலைமைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால், வாகனம் ஓட்டுவது மட்டுமல்லாமல், உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு உபகரணத்தையும் இயக்கும்போது கவனமாக இருங்கள். ஏனெனில் சில நேரங்களில் இந்த பாதிப்பு நிலையற்ற மனநிலையை தர கூடும் என்பதால் அதிக கவனம் தேவை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )