கம்பஹாவில் பயனாளி மரணித்த பின்னரும் 419 பேருக்கு ஓய்வூதிய பணம் : சுமார் 04 கோடி ரூபா வரை மோசடி
கம்பஹா மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் மரணமடைந்த பின்னரும் அவர்களுக்கு உரித்தான ஓய்வூதியப் பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகங்களில் 2023 டிசம்பர் 31ஆம் திகதி வரை ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த 419 ஓய்வூதியர்களுக்கு 04 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமையும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
இறப்புக் குறித்து அறிவிப்பதில் தாமதம், உயிருடன் இருப்பதற்கான அத்தாட்சிப்பத்திரம் வழங்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை, ஓய்வூதியம் பற்றிய சுற்றறிக்கையை கடைப்பிடிக்காமை மற்றும் ஏனைய காரணங்களால் இவ்வாறு பண மோசடி இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.